மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் திருநாங்கூரை சேர்ந்தவர் திருவேங்கடம்(78). இவர் நெய்வேலியில் என்எல்சி நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றபின் தரங்கம்பாடி தாலுக்கா தலைச்சங்காட்டில் உள்ள ஸ்ரீநாண்மதியப் பெருமாள் திருக்கோயிலில் கடந்த 20 ஆண்டுகளாக அறங்காவலராக வேலை பார்த்து வருகிறார்.
இவர் ஞாயிற்றுக்கிழமை காலை கோயிலிலிருந்து வீட்டிற்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து உறவினர்கள் திருவேங்கடத்தை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை கோயில் குளத்தில் ஆண் சடலம் மிதப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் செம்பனார்கோவில் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
செம்பனார்கோயில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குளத்தில் மிதக்கும் ஆண் சடலத்தை மீட்டு பார்த்தபோது திருக்கோயில் அறங்காவலர் திருவேங்கடம் என்பது தெரியவந்தது.