மயிலாடுதுறை:மயிலாடுதுறை நகரில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடைகள், இரவில் வேலை நேரம் முடிந்தபின் பூட்டப்பட்டாலும், அதன் அருகில் செயல்படும் பார்களில் சட்டவிரோதமாக இரவு முழுவதும் மது விற்பனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், மயிலாடுதுறை கீழநாஞ்சில்நாடு பகுதியைச் சேர்ந்த ஜீவானந்தம் (23) என்ற இளைஞர், தங்கள் பகுதியில் நடைபெறும் கோயில் விழாவுக்காக மொத்தமாக மது வாங்க, பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு நேற்று நள்ளிரவில் சென்றுள்ளார்.
அப்போது, அந்த பாரில் மதுவிற்பனையில் ஈடுபட்டிருந்த தமிழ்மணி என்பவர், அதிக விலைக்கு மது விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது. மொத்தமாக வாங்குவதால் விலை குறைத்துத் தருமாறு ஜீவானந்தம் கேட்டுள்ளார். இதற்கு தமிழ்மணி மறுப்புத்தெரிவித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஜீவானந்தம், தங்கள் பகுதியைச் சேர்ந்த 3 இளைஞர்களை உடன் அழைத்து வந்து தமிழ்மணியிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார்.