தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொடுத்த கடனை வசூலிக்கச் சென்ற நபர் அடித்துக் கொலை! - nagapattinam latest news

நாகப்பட்டினம்: கொடுத்த கடனை திரும்பக் கேட்ட நபர், உருட்டுக்கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீடு தேடி சென்று கடன் கேட்டதால் ஒருவர் அடித்து கொலை!
வீடு தேடி சென்று கடன் கேட்டதால் ஒருவர் அடித்து கொலை!

By

Published : May 22, 2021, 5:15 PM IST

நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணியை அடுத்த வடவூர் தென்பாதி பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார்.

கடந்த சில நாள்களுக்கு முன் அதே பகுதியைச் சேர்ந்த சுந்தரபாண்டியன் தனது அண்ணன் திருமணத்திற்காக குமாரிடம் 10,000 ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அதில் 7,300 ரூபாயை குமாரிடம் அவர் திரும்பக் கொடுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மீதமுள்ள 2,700 ரூபாயை வாங்க, குமார் சில நாள்களுக்கு முன்பு சுந்தரபாண்டியன் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

வீட்டில் இருந்தவர்கள் பணம் இல்லை என்றும் பிறகு தருவதாகவும் கூறியுள்ளனர். இந்நிலையில், கடந்த 14ஆம் தேதி காலையில் குமார் கடைத்தெரு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

அப்போது, குமாரை வழிமறித்த சுந்தரபாண்டியன், தனது வீட்டுக்குச் சென்றது குறித்து தகராறில் ஈடுப்பட்டார். தொடர்ந்து ஆத்திரமடைந்த சுந்தரபாண்டியன், அருகிலிருந்த உருட்டுக்கட்டையை எடுத்து குமாரின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார்.

ஆனால் சிகிச்சைப் பலனின்றி குமார் முன்னதாக உயிரிழந்தார். இந்நிலையில், வேளாங்கண்ணி காவல் துறையினர் இதனைக் கொலை வழக்காக பதிவு செய்து சுந்தர பாண்டியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: என் தாயின் வலி பிறருக்கு வரக்கூடாது: ஆக்ஸிஜன் ஆட்டோ மூலம் உதவும் பெண்!

ABOUT THE AUTHOR

...view details