நாகை மாவட்டம், ஆழியூர் பிரிவு சாலையில் நேற்று கீழ்வேளூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே எம்.சேண்ட் மணல் ஏற்றி வந்த டிராக்டரை நிறுத்தி, ஓட்டுநரிடம் மணல் வாங்கியதற்கான ஆவணங்களைக் காவலர்கள் கேட்டுள்ளனர்.
நூதன முறையில் மணல் கடத்தல் - ஒருவர் கைது, டிராக்டர் பறிமுதல்! - naagai latest news
நாகை: கீழ்வேளூர் அருகே ஆற்றுமணல் மேல் எம்.சேண்ட் மணலை கொட்டி நூதனமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட நபரை கீழ்வேளூர் காவல் துறையினர் கைது செய்து, டிராக்டரை பறிமுதல் செய்துள்ளனர்.
naagai
ஓட்டுனர் ஆவணங்களின்றி முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்துள்ளார். சந்தேகம் அடைந்த காவலர்கள் டிராக்டரை சோதனை செய்தபோது எம்.சேண்ட் மணலை மேலே கொட்டி, ஆற்று மணலை திருட்டுத்தனமாக ஏற்றி வந்திருப்பது தெரிய வந்தது. பின்னர், காவல் துறையினர் மணல் கடத்தலில் ஈடுபட்ட ஓட்டுநர் ராஜ் என்பவரைக் கைது செய்து, டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: கரூரில் மணல் கடத்தல் புகார்: பொதுப்பணித் துறை, ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு!