நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் அருகே வயல் பகுதியில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் மரத்தில் தூக்கிட்ட நிலையில் இருப்பதாக அப்பகுதி விவசாயிகள் செம்பனார்கோவில் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் உடல் மீட்பு- காவல் துறை விசாரணை! - Tamil crime newa
நாகை: செம்பனார்கோவில் அருகே 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Male body restored after being hanged
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், வயல்வெளியின் நடுவில் மரத்தில் தூக்கிட்ட நிலையில் இறந்து பல நாள்களான 40 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் அழுகிய நிலையில் தொங்கியதை கண்டறிந்தனர்.
அதன் பின் உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர், உடற்கூறாய்வுக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார்? அவர் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? போன்ற பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.