தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

யானைகள் புத்துணர்ச்சி முகாமிற்கு சென்ற கோயில் யானைகள்..! - elephant special welfare camp in covai

நாகை: தமிழ்நாடு அரசின் யானைகள் புத்துணர்ச்சி முகாமிற்கு மாயூரம், திருக்கடையூர் கோயில் யானைகள் சென்றன.

lephant special welfare camp
lephant special welfare camp

By

Published : Dec 14, 2019, 1:17 PM IST

தமிழ்நாடு அரசின் யானைகள் புத்துணர்ச்சி முகாம் வருடம்தோறும் நடைபெறுகிறது. இம்முகாமிற்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு கோயில்களிலிருந்து யானைகள் அனுப்பி வைக்கப்படும். இந்த ஆண்டும் அரசின் உத்தரவுப்படி, யானைகள் புத்துணர்ச்சி முகாம் கோயம்புத்தூர் மாவட்டம் தேக்கம்பட்டி வனப்பகுதியில் நடைபெறுகிறது.

இந்த முகாமில் கலந்து கொள்ள நாகை மாவட்டம் மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் யானை அபயாம்பாள், திருக்கடையூர் கோயில் யானை அபிராமி, உள்ளிட்ட யானைகள் லாரியில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாக ஆலயத்தின் முன்பு யானைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

புத்துணர்ச்சி முகாமிற்கு செல்லும் யானைகள்

இதில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள், கோயில் நிர்வாகிகள் கலந்து கொண்டு யானைகளை வழியனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க:

புத்துணர்வு முகாமுக்கு புறப்பட்ட கோயில் யானைகள்..!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details