நாகை மாவட்டம் மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையத்தின்பின் பகுதியில் மழைநீர் ஓடுவதற்காக கட்டப்பட்டுள்ள வடிகால் சாளரத்தில் கடந்த 5 நாட்களாக பொதுக்கழிப்பிடம் மற்றும் பழைய பேருந்து நிலைய கழிப்பிடம் ஆகியவற்றிலிருந்து வெளியேறும் மனித கழிவுகள் தேங்கி நிற்கின்றது.
பாதாள சாக்கடை திட்டத்தில் தொடரும் பிரச்னைகள்: பொதுமக்கள் கடும் அவதி! - பாதாள சாக்கடை
நாகை: மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகே பாதாள சாக்கடை திட்டத்தில் பிரச்னை ஏற்பட்டு, கழிவுநீர் வெளியாவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
மயிலாடுதுறை
இதிலிருந்து வெளியேறும் துர்நாற்றத்தினால் ஆட்டோ ஓட்டுநர்கள், வணிகர்கள், அவ்வழியே வந்து செல்லும் பொதுமக்கள் ஆகியோர் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இதையடுத்து, இந்த பிரச்னைக்கு உடனடியாக தீர்வு ஏற்படுத்தக்கோரி நகராட்சி நிர்வாகத்திடம் அப்பகுதி ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் வணிகர்கள் ஆகியோர் மனு கொடுத்துள்ளனர்.