மதுரை மாவட்டம் ரெங்கராஜபுரம் கிராமத்திற்கு சொந்தமான மயானம் அலங்காநல்லூர் செல்லும் சாலை பூதகுடி பிரிவு அருகே உள்ள மெயின் ரோட்டில் அமைந்துள்ளது. இந்த மயானம் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் இருப்பதாக கூறி பொதுப் பணித்துறையினர் அதை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதையறிந்த கிராம மக்கள் மயானத்தை காலி செய்து தனியாருக்கு விற்பனை செய்ய உள்ளதாக பொதுப்பணித் துறையினர் மீது குற்றம் சாட்டி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலும் தனியார் நிறுவனம் இந்த இடத்தில் பெட்ரோல் பங்க் அமைக்கவுள்ளதாகவும் குற்றம் சாட்டினர். இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அலங்காநல்லூர் காவல்துறையினர், மதுரை வடக்கு தாசில்தார் விஜய முத்துக்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் ஏற்படாத நிலையில் மறியல் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது.