நாகை மாவட்டம் மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் முதன்மைச் சார்பு, கூடுதல் சார்பு, மாவட்ட உரிமையியல், கூடுதல் மாவட்ட, குற்றவியல் உள்ளிட்ட நீதிமன்றங்கள் இயங்கிவருகின்றன. இந்நிலையில் நேற்று நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்துமுடிக்கும் வகையில், மக்கள் நீதிமன்றம் எனப்படும் லோக் அதாலத் நீதிமன்றம் நடைபெற்றது.
ஒரேநாளில் 269 வழக்குகளுக்கு தீர்வு! - நாகை
நாகை: மயிலாடுதுறையில் லோக் அதாலத் நீதிமன்றத்தின் மூலம் பல்வேறு பிரிவுகளின் கீழ் நிலுவையில் இருந்த சுமார் 269 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.
lok-athalath
இதில் முதன்மைச் சார்பு நீதிபதி கௌதமன், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ரிஷானா பர்வீன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். இதில், மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் உள்ள வழக்குகள், குறுக்கு விசாரணை வழக்குகள், வன்கொடுமைச் சட்டம், இந்து திருமணச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் சுமார் 269 வழக்குகளுக்கு ஒரே நாளில் தீர்வு காணப்பட்டன.