மயிலாடுதுறை: காணும் பொங்கலை முன்னிட்டு, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கடற்கரைகளில் பொதுமக்கள் கூடி மகிழ்ச்சியாக காணும் பொங்கலை கொண்டாடுவது வழக்கம்.
ஆனால், நடப்பாண்டு கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழ்நாடு அரசு ஞாயிற்றுக்கிழமையில் முழு ஊரடங்கினை அமுல்படுத்தி வருகிறது.
காணும் பொங்கலான இன்று (ஜனவரி 16) ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கால் மயிலாடுதுறை மாவட்டத்தில் சுற்றுலாத்தலங்கள், பொதுமக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
முழு ஊரடங்கு: காணும் பொங்கலன்று வெறிச்சோடிய சுற்றுலாத்தலம் தரங்கம்பாடி சுற்றுலா தலத்தில் கடற்கரையில் உள்ள டேனிஷ்கோட்டை மூடப்பட்டு பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் வருகையின்றி வெறிச்சோடி காணப்பட்டது. பொதுமக்கள் கடற்கரைக்குச் செல்லாதவாறு டேனிஷ் கோட்டைக்குச் செல்லும் நுழைவுவாயில் பகுதியில் பொறையார் காவல் துறையினர், தடுப்பு வைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: காணும் பொங்கல் : வெறிச்சோடி காணப்பட்ட பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம்