மயிலாடுதுறையில் கடந்தாண்டு சாலை புதுப்பிக்கும் பணி நடைபெற்றபோது, ஏற்கெனவே இருந்த சாலையை பெயர்த்து எடுக்காமல், பழைய சாலை மீதே மீண்டும் புதிய சாலை அமைக்கப்பட்டது.
இதை எதிர்த்து, மயிலாடுதுறை சேம்பர் ஆஃப் காமர்ஸ் தலைவர் செந்தில்வேல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். இவ்வழக்கில் தமிழ்நாடு முழுவதும் புதிய சாலை அமைக்கும் பணியின்போது, பழைய சாலைகளை பெயர்த்து எடுத்துவிட்டு உயரத்தை அதிகரிக்காமல் புதிய சாலையை அமைக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் இடைக்காலத் தீர்ப்பு வழங்கியது.
ஆனால், தமிழ்நாட்டில் குறிப்பாக மயிலாடுதுறையிலேயே சாலை அமைக்கும்போது நீதிமன்றத்தின் உத்தரவு பின்பற்றப்படவில்லை. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மயிலாடுதுறையில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற சாலை அமைக்கும் பணியை மயிலாடுதுறை சேம்பர் ஆஃப் காமர்ஸ் தலைவரும், வழக்காடியுமான செந்தில்வேல் தடுத்து நிறுத்தியுள்ளார்.