தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காசி தமிழ் சங்கத்திற்கு செல்லும் ரயிலை மறிக்க முயற்சி ? : போலீஸ் குவிப்பு! - Police gathering in Mayiladuthurai station

காசி தமிழ் சங்கமத்துக்கு செல்லும் வாரணாசி ரயிலை மறிக்க முயல்வதாக வந்த செய்தியைத் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் குவிக்கப்பட்டனர்.

காசி தமிழ் சங்கமம்: மயிலாடுதுறையில் போலீசார் குவிப்பு!
காசி தமிழ் சங்கமம்: மயிலாடுதுறையில் போலீசார் குவிப்பு!

By

Published : Dec 1, 2022, 11:29 AM IST

மயிலாடுதுறை: காசியில் நடைபெற்று வரும் தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்காக ராமேஸ்வரத்தில் இருந்து பனாரஸ் செல்லும் ரயில் மயிலாடுதுறை வழியே வியாழக்கிழமை தோறும் இயக்கப்பட்டு வருகிறது. காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி, ஆர்எஸ்எஸ் சிந்தனையுடன் நடைபெறுவதாகக் கூறி, இந்திய மாணவர் சங்கம் அமைப்பினர் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட போவதாக காவல்துறைக்கு தகவல் வந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜ் மற்றும் ஆயுதப்படை டிஎஸ்பி ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில், நான்கு காவல்துறை ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் மற்றும் ஏராளமான ஆயுதப்படை காவலர்கள் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் காலை 5 மணிக்கு குவிக்கப்பட்டனர்.

இவர்கள் ரயில்வே நிலைய நுழைவாயில் பகுதியில் உள்ள பார்சல் ஆபீஸ், மறையூர் ரயில்வே கேட், மாப்படுகை ரயில்வே கேட் மற்றும் இருப்பு பாதை ஆகிய இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ரயில்வே காவல்துறையினர் மற்றும் இருப்பு பாதை காவல்துறையினர் ஆகியோர் ரயில் நிலைய வளாகத்திற்குள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ரயில் பெட்டிகளிலும் ஆயுதம் தாங்கிய காவல்துறையினர் பாதுகாப்பு அளித்தனர். மாப்படுகை ரயில்வே கேட் பகுதியில் இரு புறங்களிலும் காவல்துறையினர் நிற்க வைக்கப்பட்டு, வேறு யாரும் உள்ளே நுழையாதபடி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. அதேநேரம் காசி தமிழ் சங்கமத்துக்கு செல்லும் ரயில் புறப்பட்டுச் சென்ற பின்னரும், காவல்துறையினர் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:"காசி தமிழ் சங்கமத்துக்கும் தமிழ்நாடு அரசுக்கும் தொடர்பு இல்லை" - அமைச்சர் சேகர்பாபு!

ABOUT THE AUTHOR

...view details