மறைந்த திமுக தலைவரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான, கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. தமிழ்நாட்டின் ஐந்துமுறை முதலமைச்சராக இருந்த இவர் தமிழுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் ஆற்றிய சேவைகளும் தீட்டிய திட்டங்களும் எண்ணிலடங்காது. அவருடைய பிறந்தநாள் விழாவினை தமிழ்நாடு முழுவதும் உள்ள திமுகவினர் வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள கருணாநிதியின் பிறந்த வீடான முத்துவேலர் நூலகத்தில் திமுகவினரால் அவரது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக கலைஞர் பிறந்த இல்லத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு நாகை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கெளதமன் தலைமையில் திமுகவினர் மலர் தூவியும் மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினர்.