கரோனா பரவலைத் தடுக்க புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பல்வேறு இடங்களிலும் தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர் .
கரோனா விழிப்புணர்வு ஓவியம்! - கரோனா வைரஸ்
நாகை: கரோனா வைரஸ் தாக்கம் பற்றி தெரியாமல் வெளியில் சுற்றும் நபர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, காரைக்கால் பகுதியிலுள்ள சுற்றுச் சுவர்களில் கரோனா குறித்த ஓவியம் வரையப்பட்டுவருகிறது.
கரோனா விழிப்புணர்வு ஓவியம்!
அத்தியாவசிய தேவைகளின்றி மக்கள் வெளியே சுற்றுவதால், கரோனா தொற்று சமூக பரவலாக மாறும் ஆபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில்கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காரைக்கால் நகராட்சி மற்றும் கல்வித்துறை சார்பில் பல்வேறு இடங்களிலும் கரோனா விழிப்புணர்வு குறித்த ஓவியங்களை வரைந்து வருகின்றனர்.
பொதுமக்கள் தனி நபர் விலகலை கடைப்பிடித்து கரோனா நோய்த் தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.