நாகை மாவட்டம், தரங்கம்பாடி அருகே அனந்தமங்கலம் வடக்கு தெருவை சேர்ந்தவர் லதா. இவர் அதே பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் ஆலயம் முன்பாக அர்ச்சனை பொருட்கள் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். ஒருவர் வெளிநாட்டிலும், விஜய் என்பவர் அம்மாவுக்கு துணையாக கடையை கவனித்து வருகிறார்.
ஜன்னல் கம்பியை உடைத்து 20 பவுன் நகை, பணம் கொள்ளை! - போலீஸ்
நாகை: தரங்கம்பாடி அருகே வீட்டின் பக்கவாட்டு ஜன்னல் கம்பியை அறுத்து பீரோவில் இருந்த 20 பவுன் நகை மற்றும் 20 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அமாவாசை என்பதால் இரவு 12 மணிக்கு வீட்டைப் பூட்டிவிட்டு அர்ச்சனைப் பொருட்களை வியாபாரம் செய்வதற்காக கடைக்கு வந்துள்ளார். இதைத்தொடர்ந்து இன்று (திங்கள்கிழமை) காலை 10 மணிக்கு வியாபாரம் முடித்து விட்டு லதா, தனது வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது அதிர்ச்சியடைந்தார். வீட்டின் பக்கவாட்டுச் சுவரின் ஜன்னல் கம்பி பிளேடால் அறுக்கப்பட்டு இரண்டு பீரோக்கள் உடைக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து, பீரோவில் இருந்த 20 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கத்தை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், நாகையிலிருந்து மோப்பநாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை நடைபெற்ற இடத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.