தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 14, 2021, 11:26 AM IST

ETV Bharat / state

பாதாள சாக்கடையில் புதிய மூடி பொருத்தும் பணி தீவிரம்!

மயிலாடுதுறையில் ஊரடங்கை பயன்படுத்தி பிரதான சாலையில் பாதாள சாக்கடை குழாயின் புதிய மூடி பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

புதிய மூடி பொருத்தும் பணி
புதிய மூடி பொருத்தும் பணி

மயிலாடுதுறை - கும்பகோணம் சாலை கடந்த மாதம் புதிதாக அமைக்கப்பட்டது. இதனால் பாதாள சாக்கடை ஆள் நுழைவு தொட்டி மூடப்பட்டது. இந்த பகுதியில் தொடர்ந்து போக்குவரத்து அதிகரித்து வந்ததால் புதிய மூடி பொருத்தும் பணிகள் தொடங்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில், தற்போது ஊரடங்கை பயன்படுத்தி இச்சாலையில் பாதாள சாக்கடை கழிவுநீர் ஆள்நுழைவு தொட்டிக்கு மூடி பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வாகன போக்குவரத்து இல்லாத நிலையில் நகராட்சி நிர்வாகத்தினர் இந்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சில்வர் குடத்தில் சிக்கிய சிறுவனின் தலை!

ABOUT THE AUTHOR

...view details