தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உரிய ஆவணங்களின்றி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள்

விசைப்படகில் உரிய ஆவணங்களின்றி கடலில் மீன்பிடித்த மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்பது மீனவர்களை இந்திய கப்பல் படையினர் பிடித்து விசாரணை நடத்தினர்.

உரிய ஆவணங்களின்றி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள்
உரிய ஆவணங்களின்றி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள்

By

Published : Mar 11, 2022, 5:11 PM IST

மயிலாடுதுறை: திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஒன்பது மீனவர்கள் உரிய ஆவணங்கள் இன்றி விசைப்படகு மூலம் கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடலோரப் படையினர் படகுகளை ஆய்வு செய்தபோது, அவர்களிடம் எந்தவிதமான ஆவணங்கள் இல்லாத காரணத்தால் சந்தேகத்தின்பேரில் விசாரணைக்காக படகுடன் நாகை துறைமுகம் அழைத்து வந்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம், திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் கலைவாணன். இவருக்குச் சொந்தமான விசைப்படகில் நேற்று (மார்ச் 10) மதியம் 2 மணியளவில் கலைவாணன், ராஜி, கவியரசன், செங்குட்டுவன் உள்ளிட்ட ஒன்பது மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

உரிய ஆவணங்களின்றி மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள்

திருமுல்லைவாசல் கிழக்கே ஆறு நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, ரோந்துப் பணியில் ஈடுபட்ட இந்திய கப்பல் படையினர் மீனவர்களின் படகையும், ஆவணங்களையும் சோதனை செய்தனர். அப்போது அவர்கள் உரிய ஆவணங்களின்றி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து படகுடன் ஒன்பது மீனவர்களையும் நாகை துறைமுகம் அழைத்து வந்தனர். அங்கு மீன்வளத் துறையினர், கடலோரக் காவல் குழும காவலர்கள் விசாரணை மேற்கொண்டதில், கலைவாணன் நாகை அக்கரைப்பேட்டை மணிகண்டனிடமிருந்து படகு வாங்கியதும், பெயர் மாற்றம் செய்யப்படாததும் தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து அவர்களது உறவினர்கள் அடையாள அட்டை, படகின் ஆவண நகலை கொடுத்தனர். பின்பு அவர்கள் மயிலாடுதுறை மாவட்டம், திருமுல்லைவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என உறுதிப்படுத்திய பின்பு அவர்களை விடுவித்தனர். அடையாள அட்டை மற்றும் ஆவணங்கள் இல்லாமல் கடலுக்குச்சென்ற மீனவர்கள் மீது விரைவில் மீன்வளத்துறை அலுவலர்கள் அபராதம் விதிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: 'பள்ளி மாணவர்களின் நலன் கருதி.. பள்ளிக் கல்வித் துறையின் உத்தரவு'

ABOUT THE AUTHOR

...view details