மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் சார்பில் வேட்பாளர் ராஜசேகர் தென்னந்தோப்பு சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.
அமெரிக்க வாழ் இந்தியரான ராஜசேகர், இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது குடியுரிமையை ரத்து செய்துவிட்டு, தனது சொந்த ஊரான மயிலாடுதுறையில் இந்தத் தேர்தலைச் சந்திக்கிறார்.
தேர்தல் பரப்புரையின் கடைசி நாளான இன்று மயிலாடுதுறை நகரில் பல்வேறு இடங்களுக்கு சைக்கிளில் சென்று சூறாவளி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
சுயேச்சை வேட்பாளர் ராஜசேகர் வாக்காளர்களுக்கு வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே, சைக்கிளில் சென்றதாக கூறினார். மேலும் தன்னைப் போன்று வெளிநாடுகளில் வேலை பார்க்கும் ஏராளமான வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இந்தியா வந்து சுயநலமின்றி தேர்தலில் போட்டியிடத் தயாராக இருப்பதாகவும், அவர்களை ஊக்குவிக்கும் வகையில் தன்னை வெற்றிபெற வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மயிலாடுதுறை வேட்பாளர் சைக்கிளில் சென்று நூதன வாக்கு சேகரிப்பு