தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'என் மீதா புகார் அளிக்கிறாய்...!' - ரயில் நிலையத்தில் பெயிண்டர் கொடூரமாக வெட்டிக் கொலை! - 2 arrested

நாகை: காவல் நிலையத்தில் புகார் அளித்ததற்காக, பட்டப்பகலில் கொள்ளிடம் ரயில் நிலையத்தில் பெயிண்டரை கொடூரமாக அரிவாளால் வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடராஜமணி

By

Published : Jun 9, 2019, 9:48 PM IST

நாகை மாவட்டம், சீர்காழி அருகே கொள்ளிடம், பரவங்காட்டை சேர்ந்தவர் நடராஜமணி(40). பெயிண்டர். அதே பகுதியை சேர்ந்த கார்த்தி என்பவர், நேற்று இரவு நடராஜமணி தாய் தனத்திடம் தகராறு செய்து தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த தனத்தை, அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவனையில் அனுமதித்தனர்.

இது குறித்து கார்த்தி மீது கொள்ளிடம் காவல் நிலையத்தில் தனம் புகார் அளித்தார். மருத்துவனையில் உள்ள தாயை பார்ப்பதற்காக நடராஜமணி, அவர் மனைவி குழந்தயுடன் கொள்ளிடம் இரயில் நிலையத்திற்கு இன்று காலை வந்தார். அப்போது அங்கு நண்பர்களுடன் வந்த கார்த்தி, நடராஜமணியிடம் தகராறில் ஈடுபட்டார். பின்பு அவரை தாக்க தொடங்கினர். இவர்களிடம் தப்பித்து ஓடிய நடராஜமணியை விரட்டி சென்று சரமாறியாக வெட்டி படுகொலை செய்தனர். பின்பு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

தங்கள் கண்முன்னே கொல்லப்பட்ட நடராஜமணி கொடூரமாக கொலை செய்யப்பட்டதை பார்த்து நடராஜமணியின் மனைவி மற்றும் அவரது மகள் ஆகியோர் அதிர்ச்சியில் உறைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சீர்காழி துணை காவல் கண்காணிப்பாளர் வந்தனா தலைமையிலான காவலர்கள், நடராஜமணி உடலை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

ரயில் நிலையத்தில் பட்டபகலில் பெயிண்டர் வெட்டி படுகொலை; 2 பேர் கைது!

கொள்ளிடம் காவல்நிலையத்தில் கார்த்தி மீது கொடுத்த புகாருக்கு காவலர்கள் நடவடிக்கை எடுத்திருந்தால், இந்தக் கொலை நடந்திருக்காது என்று காவலர்களிடம் நடராஜமணி குடும்பத்தினர் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். பின்னர் இந்த கொலை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக காவலர்கள் உறுதி அளித்ததால், குடும்பத்தினர் உடலை பெற்றுக் கொண்டு சென்றனர்.

இந்நிலையில் காவல்துறையினர் கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த கார்த்தி, நண்பர் சத்யா இருவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details