வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு காவலர்களுக்கான தபால் வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது.
நாகையில் காவலர்கள் தபால் வாக்குகளை செலுத்தினர் - 1000 police cast postal votes
நாகப்பட்டினம்: நாடளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நாகை மாவட்ட காவல்துறையினர் இன்று தபால் வாக்குகளை செலுத்தினர்.
காவல்துறையினருக்கான தபால் வாக்குபதிவு
நாகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் காவலர்கள் வரிசையில் நின்று தங்கள் தபால் வாக்குகளை பதிவு செய்தனர். மேலும், வாக்குப்பதிவு மையங்களில் உதவி தேர்தல் அலுவலர் கமல்கிஷோர் தலைமையில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்புக்குப் போடப்பட்டிருந்தனர்.