கரோனா வைரஸ் தொற்று சென்னை முழுவதும் தீவிரமாக பரவ தொடங்கியுள்ளதால், அங்கிருந்து தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்கு சென்றவர்கள் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
இதேபோல் சென்னை உள்ளிட்ட வெளிமாவட்டத்திலிருந்து நாகைக்கு வந்த 197 பேரின் சளி, ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு கரோனா வைரஸ் பரிசோதனைக்கு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.