மயிலாடுதுறை :செம்பனார்கோவிலில் இருந்து மேலப்பாதி செல்லும் சாலையில் ஆற்றங்கரை ஓரத்தில் டாஸ்மாக் மதுபானக் கடை இயங்கி வருகிறது.
சட்டவிரோத மது விற்பனை
இந்தக் கடை உள்ள பகுதியில் மதுபாட்டில்களை வாங்கி வைத்து கொண்டு வருடத்தில் 365 நாட்களும் அனைத்து நேரத்திலும் மது விற்பனை நடைபெறுவதாகவும், அதனை காவல்துறையினர் கண்டுகொள்வதில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், பொங்கல் விழா, கரோனா முழு ஊரடங்கு காரணமாக சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் அனைத்து டாஸ்மாக் மதுபானக்கடைகளும் மூடப்பட்டன.
ஊரடங்கு நாளில் சட்டவிரோதமாக மது விற்பனை இருப்பினும் மதுபானக்கடை உள்ள பகுதியில் மட்டும் சட்டவிரோதமாக மதுபானம் தங்குதடையின்றி விற்பனையாகி வந்ததாகவும், இக்கடையில், 10க்கும் மேற்பட்டோர் விடுமுறை தினத்திற்கு முன்பாகவே, பெட்டி, பெட்டியாக மதுபானங்களை வாங்கி வைத்துக்கொண்டு,கூடுதல் விலைக்கு விற்று வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அலட்சியம் காட்டும் காவல்துறை
மேலும் இதுகுறித்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறைக்கு புகார் தெரிவித்தால், பெயரளவுக்கு ஓரிருவரை மட்டும் கைது செய்யும் காவல்துறையினர், சட்டவிரோத மது விற்பனையை கண்டுகொள்வதில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், டாஸ்மாக் கடை அருகில் ஊரடங்கு நேரத்தில் சட்டவிரோதமாக மதுவிற்பனையில் ஈடுபட்டதாக செம்பனார்கோவில் காவல்துறையினர் ஆடுதுறையைச் சேர்ந்த அருள் என்பவரைக் கைது செய்துள்ளனர். இதேபோல் வல்லம் கீழத்தெருவில் மதுவிற்பனை செய்த கஜேந்திரன் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
இதையும் படிங்க:மயிலாடுதுறையில் நூற்றுக்கணக்கான மாடுகளுக்கு பூஜை...!