மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பெரம்பூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட அன்னவாசல் ஊராட்சி வாடகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமணி(55). கூலித்தொழிலாளியான இவரது மனைவி மோகனாம்பாள்(45). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக தம்பதியினரிடையே குடும்பத் தகராறு இருந்துள்ளது.
பயிர் காப்பீட்டு தொகையை மனைவி மோகனாம்பாள் கேட்டதில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனைவியை பிரிந்து திருக்கடையூரில் உள்ள அவரது சகோதரர் வீட்டில் வீரமணி வசித்து வந்துள்ளார். பிள்ளைகளுடன் வாடகுடியில் வசிக்கும் மோகனாம்பாள் கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார்.