நாகை மாவட்டத்தில்பிரசித்திப்பெற்ற வேல்நெடுங்கன்னியம்மன் உடனுறை நவநீதேஸ்வர சுவாமி திருக்கோயில் உள்ளது. இங்கு நடைபெறும் சத்ரு சம்ஹார ஹோமம் எதிரிகளை வதம் செய்யக் கூடியது என்பது ஐதீகம்.
தேர்தல் வெற்றிக்காக ஹெச்.ராஜா ரகசிய யாகம்? - பாஜக
நாகை: பிரசித்திப்பெற்ற சிங்காரவேலர் ஆலயத்தில் பாஜக தேசிய செயலாளரும், சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளருமான ஹெச்.ராஜா ரகசிய யாகம் நடத்தியுள்ளார்.
ஹெச்.ராஜா
இந்நிலையில், இங்கு குடும்பத்துடன் வருகைதந்த பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா, நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெறுவதற்கு,எதிரிகளை வதம் செய்யக் கூடிய சத்ரு சம்ஹார ஹோமத்தில்,இன்று அதிகாலை ரகசியமாக குடும்பத்துடன் ஈடுபட்டார்.
தேர்தலைத் தொடர்ந்து இவர் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கோயில்களில் வழிபாடு செய்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.