தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீட்டின் பூட்டை உடைத்து ஆறு பவுன் தங்க நகை திருட்டு - Mayiladuthurai jewelery theft

குத்தாலம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ஆறு பவுன் தங்க நகை, வெள்ளி பொருள்கள் திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தங்க நகை திருட்டு
தங்க நகை திருட்டு

By

Published : Dec 15, 2021, 9:39 AM IST

மயிலாடுதுறை: குத்தாலம் தாலுக்கா ஆனாங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காசிநாதன். இவர் வெளிநாட்டில் பணியாற்றி வருவதால் அவரது மனைவி இலக்கியா தனது இரண்டு குழந்தைகளுடன் அரையபுரத்திலுள்ள தாய் வீட்டில் தங்கியுள்ளார்.

இந்நிலையில், நேற்று (டிசம்பர் 14) இலக்கியா தனது வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டு கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது, இரண்டு பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த த ஆறு பவுன் தங்க தாலி செயின், 800 கிராம் மதிப்புள்ள வெள்ளி விளக்குகள், எல்இடி டிவி ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்று காவலர்கள் பார்வையிட்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நாகையிலிருந்து கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க:கணவன், மனைவி தற்கொலை விவகாரம்: மகனிடம் தீவிர விசாரணை

ABOUT THE AUTHOR

...view details