தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் அலுவலகம் திறப்பு - highway divisional office

மயிலாடுதுறையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட அலுவலகத்தை சட்டப்பேரவை உறுப்பினர்கள் திறந்து வைத்தனர்.

அலுவலகம் திறப்பு
அலுவலகம் திறப்பு

By

Published : Sep 22, 2021, 7:24 AM IST

Updated : Sep 22, 2021, 7:39 AM IST

தமிழ்நாட்டின் 38 வது மாவட்டமாகக் கடந்த ஆண்டு மயிலாடுதுறை மாவட்டம் பிரிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வந்தாலும், பல்வேறு துறைகள் பிரிக்கப்படாமல் ஒருங்கிணைந்த நாகப்பட்டினம் மாவட்டத்தின் தலைமையில் இயங்கி வருகிறது.

இதனிடையே மயிலாடுதுறை நெடுஞ்சாலைத்துறை சார்பில் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம் புதிதாகக் கட்டப்பட்டு உள்ளது.

கோட்டப் பொறியாளர்அலுவலகம் திறப்பு
இந்நிலையில் புதிதாகக் கட்டப்பட்ட அலுவலகத்தை நேற்று (செப் 21) சட்டப்பேரவை உறுப்பினர்கள் நிவேதா எம்.முருகன், பன்னீர்செல்வம் ஆகியோர் குத்து விளக்கேற்றித் திறந்து வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் திருச்சி கண்காணிப்பு பொறியாளர் கிருஷ்ணசாமி, நாகப்பட்டினம் கோட்ட பொறியாளர் நாகராஜ் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:நெஞ்சில் ஈரமற்றோரின் கொடுஞ்செயலால் பசுவுக்கு நேர்ந்த துயரம்!

Last Updated : Sep 22, 2021, 7:39 AM IST

ABOUT THE AUTHOR

...view details