தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடி போதையில் தகராறு செய்த தலைமைக் காவலர் - வைரலாகும் வீடியோ! - அட்டகாசம்

நாகப்பட்டினம்: மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த தலைமைக் காவலர் குடிபோதையில் நோயாளிகளிடம் தகராறு செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலகி வருகிறது.

police

By

Published : Jun 28, 2019, 4:32 PM IST

Updated : Jun 28, 2019, 5:18 PM IST

நாகை மாவட்டம் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றுபவர் செந்தில்குமார். இவர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் நேற்றிரவு (ஜூன் 27) பாதுகாப்பு பணியில் இருந்துள்ளார். அப்போது மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த ரியாஸ் என்பவர் தனது நண்பர் குருநாதனுக்கு உடல்நிலை சரியில்லாததால் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார்.

இதனையடுத்து பணியில் இருந்து தலைமைக் காவலர் செந்தில்குமார், ஏன் இரவு நேரத்தில் நோயாளிகளை கொண்டு வந்துள்ளீர்கள் என்று கேட்டு தகராறில் ஈடுபட்டார். அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

தலைமை காவலர் செந்தில்குமார் குடிபோதையில் பிரச்னை செய்தததை, செல் போனில் படம் பிடித்த போது செல்போனையும் பிடுங்கி உடைத்துள்ளார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் வெள்ளதுரை விசாரனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைமைக் காவலர் குடிபோதையில் நோயாளிகளிடம் தகராறு செய்யும் வீடியோ
Last Updated : Jun 28, 2019, 5:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details