மயிலாடுதுறை :இந்திய விளியாட்டு ஆணையம் ,ராஜிவ் காந்தி உள் விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான கைப்பந்துப் போட்டி இரவு தொடங்கியது.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து போட்டியாளர்கள் பங்கேற்பு:
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நாகை வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பாக 2 நாள் நடைபெறும் இந்தப் போட்டியில் சென்னை, மதுரை, திருச்சி, மயிலாடுதுறை, பொள்ளாச்சி, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆடவர் பிரிவில் ஏழு அணிகளும், மகளிர் பிரிவில் ஐந்து அணிகளும் பங்கேற்று லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றில் போட்டி நடைபெறுகிறது.
ரூ.25,000 வரை பரிசுத்தொகை:
போட்டியில் ஆடவர் பிரிவில் முதலிடத்தை பிடிப்பவர்களுக்கு ரூ.25,000, இரண்டாம் பரிசு பெறுபவர்களுக்கு ரூ.20,000 எனப் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. இதேபோல் மகளிர் பிரிவில் முதல் பரிசாக ரூ.20,000, இரண்டாம் பரிசாக ரூ.15,000 எனப் பரிசுகள் வழங்கப்பட உள்ளன. தொடர்ந்து மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி நடைபெறுகிறது.