நாகப்பட்டினம்: உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் உள்ள ஸ்ரீ ஆதிசங்கரர் பரிபூரணம் அடைந்த ஷேத்திரம் ரூ.250 கோடியில் புனரமைக்கப்பட்டது. அதனை பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவ.5) திறந்து வைத்தார்.
அதன் காணொலி காட்சி நாகப்பட்டினம் மாவட்டம், வைத்தீஸ்வரன் கோயிலில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் பாஜக சார்பில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில், பாஜக முன்னாள் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கலந்து கொண்டார்.
பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பு
பின்னர் செய்தியாளர்களிடம் ஹெச். ராஜா கூறியதாவது, "மத்திய அரசு பெட்ரோலுக்கு ஐந்து ரூபாயும் டீசலுக்கு 10 ரூபாயும் விலையைக் குறைத்துள்ளது.
அதேபோல் பாஜக ஆளும் மற்ற மாநிலங்களிலும் பெட்ரோல், டீசல் விலைக் குறைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் அரசு என்று கண்ணீர் வடிக்கும் திமுக, மக்களுக்காக இதேபோல் விலைக் குறைப்பை செய்ய வேண்டும்.