மயிலாடுதுறை:சீர்காழியில் சபாநாயகர் முதலியார் இந்து மெட்ரிகுலேஷன் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் பத்தாவது ஆண்டு தாத்தா பாட்டி தினம் வெகு விமர்சையாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. முதலாவதாகப் பாட்டிகளுக்கான கோலப்போட்டி நடைபெற்றது, இப்போட்டியில் பாட்டிக்கு உதவியாகப் பேத்திகளும் பங்கு பெற்றனர்.
மத நல்லிணக்கத்தைக் காப்போம், தாத்தாவைவிடச் சிறந்த ஆசிரியர் இல்லை, பாட்டியை விடச் சிறந்த மருத்துவர் இல்லை, எங்களால் நீங்கள் என்றும் உங்களுடன் இருப்போம் என வசகங்களை எழுதிக் கோலமிட்டனர். மேலும் தாத்தாக்களுக்கான அம்பு எறிதல் போட்டியில் கலந்து கொண்ட தாத்தாக்களை உற்சாகப்படுத்தும் வகையில் மைதானத்தில் அமர்ந்திருந்த மாணவ,மாணவிகள் கைதட்டி உற்சாகப்படுத்தினர். போட்டியில் வெற்றி பெற்ற தாத்தா, பாட்டிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டது.