நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில், மூன்றாம் பாலினத்தவரான திருநங்கைகள் 10 பேர் ஒன்றாக வசித்து வருகின்றனர். இவர்கள் பேருந்து நிலையம், ரயில்கள், கடைகளில் தினந்தோறும் சென்று பணம் வசூல் செய்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.
உதவித்தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - திருநங்கைகள் கோரிக்கை
நாகப்பட்டினம்: மயிலாடுதுறையில் ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் இழந்துள்ள 10 திருநங்கைகள் தங்களுக்கு அரசு உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையில் கரோனா முன்னெச்சரிக்கை ஊரடங்கு உத்தரவு காரணமாக ரயில்கள் இயங்காததாலும், கடைகள் மூடப்பட்டு உள்ளதாலும் இவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். இந்த 10 பேரில் நான்கு பேருக்கு மட்டுமே ரேஷன் கார்டு உள்ளதாகவும், அரசு அறிவித்துள்ள ரூ.1000 பணம் மற்றும் ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு கூட வழியில்லை என்றும் கூறுகின்றனர்.
மேலும், நல வாரியம் மூலமாக கிடைக்கக்கூடிய பணமும் தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும் ஊரடங்கால் பசி பட்டினியில் வாடி வரும் தங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் திருநங்கைகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் ராதாகிருஷ்ணனிடம் முறையிட்டுள்ளனர்.