தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாங்கூர் பகுதியில் கெயில் நிறுவன வாகனம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு !

நாகை: சீர்காழி அருகே நாங்கூர் பகுதியில் கெயில் நிறுவனத்தின் ஓ.என்.ஜி.சி குழாய் பதிக்கும் பணியின் போது ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

Gail company vehicle caught fire in Nangur area
Gail company vehicle caught fire in Nangur area

By

Published : Jul 15, 2020, 2:59 AM IST

நாகை மாவட்டம் சீர்காழி அருகே பழைய பாளையம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவன எண்ணெய் சேமிப்பு கிடங்கு அமைந்துள்ளது. சுற்று வட்டார பகுதிகளில் எடுக்கப்படும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்ல கெயில் நிறுவனத்தின் மூலம் மாதானத்திலிருந்து - மேமாத்தூர் வரை 29 கி.மீ தூரம் விளைநிலங்களில் நடுவே குழாய் புதைக்கும் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்றுவருகின்றன.

மேலும், குழாய் புதைப்பதற்கு ஒரு சில இடங்களில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த இடங்களில் குழாய் புதைக்காமல் கிடப்பில் போடப்பட்டது. தற்பொழுது அந்த இடங்களை குழாய் பதிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில் சீர்காழி அருகே நாங்கூர் பகுதியில் கெயில் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

குழாய் புதைத்த பிறகு அதில் உள்ள தூசிகளை அகற்ற கம்ப்ரஸர் மிஷின் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் திடீரென அந்த இயந்திரம் தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் இயந்திரத்தில் ஏற்பட்ட தீயை அனைத்தனர். இதனால் மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details