தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாகையில் நான்காயிரம் லிட்டர் மதுபானம் மண்ணில் ஊற்றி அழிப்பு! - Four thousand liters

நாகை: மயிலாடுதுறை அருகே வெளிமாநிலங்களிலிருந்து கடத்திவரப்பட்டு, காவல் துறையினரால் பறிமுதல்செய்யப்பட்ட நான்காயிரம் லிட்டர் மது மண்ணில் ஊற்றி அழிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நான்காயிரம் லிட்டர் மதுபானம் மண்ணில் ஊற்றி அழிப்பு -
நான்காயிரம் லிட்டர் மதுபானம் மண்ணில் ஊற்றி அழிப்பு -

By

Published : Apr 29, 2020, 9:49 AM IST

நாகை மாவட்டம் மயிலாடுதுறை மதுவிலக்குப் பிரிவு காவல் துறையினர் 2017ஆம் ஆண்டுமுதல் தற்போதுவரை பல்வேறு இடங்களில் வெளிமாநில மது பாட்டில்களைப் பறிமுதல்செய்து வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

கரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால், மதுப்பிரியர்கள் மது கிடைக்காமல் அல்லாடிவரும் நிலையில், நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம், இதுவரை பறிமுதல்செய்யப்பட்ட வெளிமாநில மதுபானங்களை அழிக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து மயிலாடுதுறை, அடியாமங்கலம் கிராமத்தில் மதுவிலக்குப் பிரிவு துணை கண்காணிப்பாளர் சாமிநாதன் தலைமையில் கலால் வட்டாட்சியர் சங்கர், மதுவிலக்கு காவல் ஆய்வாளர் வள்ளி ஆகியோர் முன்னிலையில் 21 ஆயிரத்து 452 வெளிமாநில மதுபானங்கள் மண்ணில் ஊற்றி அழிக்கப்பட்டன.

மதுபானங்கள் அழிக்கப்படும் தகவலறிந்த மதுப்பிரியர்கள் அதிகளவில் அப்பகுதியில் கூடியதால் பரபரப்பு நிலவியது.

நான்காயிரம் லிட்டர் மதுபானம் மண்ணில் ஊற்றி அழிப்பு

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை காவல் துறையினர், அப்பகுதிக்கு வந்த மதுப்பிரியர்களை அங்கிருந்து விரட்டியடித்தனர்.

மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் இல்லாததால் வீட்டிலேயே கள்ளச்சாரயம் காய்ச்சும் அளவிற்கு வந்துள்ள மதுப்பிரியர்கள் இருக்கு நிலையில், மயிலாடுதுறை அருகே சுமார் நான்காயிரம் லிட்டர் மது மண்ணில் ஊற்றி அழிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:மளிகைக் கடையில் போதைப்பொருள்: ஒருவர் கைது

ABOUT THE AUTHOR

...view details