தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பறவைகளைை வேட்டையாடிய 4 பேர் கைது: இரண்டு துப்பாக்கிகள், கார் பறிமுதல்! - nagapattinam

நாகை: சீர்காழி பனமங்கலம் காட்டுப்பகுதியில் பறவைகளை வேட்டையாடிய நான்கு பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

வெளிநாட்டு பறவைகள் வேட்டை 4 பேர் கைது  நாகை மாவட்டச் செய்திகள்  சீர்காழி  பனமங்கலம்  பறவை வேட்டை கைது  bird hunding arrest  nagapattinam  Sirkali
பறவைகளைை வேட்டையாடிய 4 பேர் கைது: இரண்டு துப்பாக்கிகள், கார் பறிமுதல்

By

Published : May 8, 2020, 10:30 AM IST

நாகை மாவட்டம் சீர்காழி அருகே பனமங்கலம் பகுதியிலுள்ள காட்டுப்பகுதிக்கு பறவைகள் அதிகம் வருகின்றன. அவற்றை சீர்காழியைச் சேர்ந்த ஜார்ஜ் பிரபாகரன், வெற்றிச்செல்வன், ஹரிஹரன், ரமேஷ் ஆகிய 4 பேரும் இரண்டு துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு வேட்டையாடி கொண்டிருந்தனர்.

இது தொடர்பாக வனத்துறையினர் மற்றும் காவல் துறைக்கு அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் ரகசிய தகவல் அளித்துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த அலுவலர்கள், கொக்கு, காட்டு புறா, கெளதாரி, வெளிநாட்டு பறவைகள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பறவைகளை வேட்டையாடிய அவர்களை கையும் களவுமாகப் பிடித்தனர்.

அவர்களிடமிருந்து வேட்டையாடப்பட்ட பறவைகள், வேட்டையாட பயன்படுத்திய துப்பாக்கிகள், கார் ஆகியவற்றை சீர்காழி வனத்துறையினர் பறிமுதல் செய்து குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்கள் நான்கு பேரையும் 15 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க குற்றவியல் நீதிபதி தரணிதரன் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: மதுப்பிரியர்களை உற்சாகப்படுத்திய காவலர்!

ABOUT THE AUTHOR

...view details