தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாயமான மீனவர்களைத் தேட விமானம், கப்பல் ரேடார் மூலம் மத்திய அரசு நேரடியாக ஈடுபட வேண்டும் - ஓ.எஸ்.மணியன் - காணாமல் போன மீனவர்கள்

நாகப்பட்டினம்: நடுக்கடலில் மாயமான மீனவர்களைத் தேடும் பணியில் விமானம் மற்றும் கப்பல் ரேடார் மூலம் மத்திய அரசு நேரடியாக ஈடுபட வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாயமான மீனவர்களை தேட விமானம், கப்பல் ரேடார் மூலம் மத்திய அரசு நேரடியாக ஈடுபட வேண்டும் - ஓ.எஸ்.மணியன்
மாயமான மீனவர்களை தேட விமானம், கப்பல் ரேடார் மூலம் மத்திய அரசு நேரடியாக ஈடுபட வேண்டும் - ஓ.எஸ்.மணியன்

By

Published : May 19, 2021, 6:54 PM IST

நாகப்பட்டினம் அடுத்துள்ள சாமந்தான்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் கேரளா அருகே டவ்-தே புயலில் சிக்கிக்கொண்டு, மாயமானார்கள். மீனவர்கள் இதுவரை மீட்கப்படாத காரணத்தால், அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. இந்நிலையில் சாமந்தான்பேட்டை மீனவ கிராமத்திற்குச் சென்ற முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான ஓ.எஸ்.மணியன் காணாமல் போன மீனவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார்.

நாகப்பட்டினம் மீனவர்களைச் சந்தித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

மேலும் அதிமுக சார்பாக பாதிக்கப்பட்ட 9 மீனவர்களின் குடும்பத்திற்குத் தலா 10 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவியை அமைச்சர் வழங்கினார்.

பின்னர் பேசிய அவர் நடுக்கடலில் காணாமல் போன நாகப்பட்டினம் மீனவர்களைத் தேடும் பணியில் மத்திய அரசு நேரடியாக ஈடுபட வேண்டும் எனவும், மீனவர்களை மீட்பதற்கு தீவிர முயற்சி எடுக்க வேண்டும் எனவும், காணாமல் போன மீனவர்களை மீட்பதற்கான பணிகளைப் பிரதமர் மோடி முடுக்கிவிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

மேலும் மத்திய அரசு முழுவீச்சில் வான்வழித் தேடுதலையும், கடல் வழித் தடங்களிலும், ரேடார் போன்ற அதி நவீன கருவிகள் உதவிகளுடன் விஞ்ஞானத்தொழில் நுட்பத்தையும் பயன்படுத்தி மீனவர்களை மீட்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தினார் .

இதையும் படிங்க:டாக் டே' புயல்: மாயமான தமிழ்நாட்டு மீனவர்கள், கதறி அழும் உறவினர்கள்!

ABOUT THE AUTHOR

...view details