தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாயூரநாதர் கோயில் யானையை ஆய்வு செய்த வனத்துறை அலுவலர்கள் - திருவாவடுதுறை

திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் யானையை வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

மாயூரநாதர் கோயில் யானையை வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்
மாயூரநாதர் கோயில் யானையை வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்

By

Published : Dec 20, 2022, 5:09 PM IST

மாயூரநாதர் கோயில் யானையை ஆய்வு செய்த வனத்துறை அலுவலர்கள்

மயிலாடுதுறையில்பிரசித்திபெற்ற திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமாக மாயூரநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் அபயாம்பாள் என்ற யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானையை இன்று மாவட்ட வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

மாவட்ட வன அலுவலர் யோகேஷ்குமார் மீனா ஐ.எப்.எஸ் தலைமையில் உதவி வன பாதுகாவலர் கிருபாகரன், யானைகள் ஆராய்ச்சி மாவட்டக்குழு உறுப்பினர் சிவகணேஷ், வனச்சரக அலுவலர் ஜோசப் டேனியல் மற்றும் மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்தனர்.

ஆய்வின்போது யானையின் கண், தோல், பாதம், யானையின் வெளிப்புறத்தோற்றம் ஆகியவற்றை கால்நடைத்துறையினர் ஆய்வு செய்தனர். பின்னர் யானையை நடக்க வைத்து பரிசோதித்த அதிகாரிகள், யானைக்கு வழங்கப்படும் உணவுகள் மற்றும் பராமரிப்பு முறைகள் பற்றி யானைப்பாகன் செந்திலிடம் கேட்டறிந்தனர். அப்போது, கோயில் துணை கண்காணிப்பாளர் கணேசன் உள்ளிட்ட அலுவலர்கள் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க:மயிலாடுதுறை சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் தேதி அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details