தமிழ்நாடு

tamil nadu

”மண்ணெண்ணெய் அளவு மீண்டும் பழையபடி வழங்க நடவடிக்கை” - அமைச்சர் சக்கரபாணி!

By

Published : Jun 18, 2021, 9:20 AM IST

கடந்த 5 ஆண்டுகளாக ரேசன் கடைகளில் குறைத்து வழங்கப்பட்ட மண்ணெண்ணெய் அளவு மீண்டும் பழையபடி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

food-minister-inspection
food-minister-inspection

நாகை : மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே எருக்கூர் நவீன அரிசி ஆலையில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு மேற்கொண்டார்.அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ”விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய வரும்போது காத்திருக்க வேண்டிய நிலை இனி இருக்காது.

விவசாயிகள் எடுத்து வரும் நெல் உடனுக்குடன் கொள்முதல் செய்யப்படும். எருக்கூர் நவீன அரிசி ஆலையில் மூன்று வருடங்களுக்கு முன்பு புதிதாக தொடங்கப்பட்ட நெல் சேமிப்பு கொள்கலன்கள் இதுவரையில் செயல்பாடு இல்லாமல் உள்ளது. இதுகுறித்து அலுவலர்களிடம் கலந்து ஆலோசனை செய்து உரிய முறையில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

எருக்கூர் நவீன அரிசி ஆலையில் இருந்து கரித்துகள்கள் வெளியேறுவதால் சுற்றுப்புறத்தில் உள்ள வீடுகளில் படிவதுடன் சுற்றுப்புற சூழ்நிலையை மாசு படுத்துவதாக இங்குள்ளவர்கள் தெரிவித்ததனர். அதன் அடிப்படையில் இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு கரித்துகள் வெளியே செல்லாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும்.

உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி
நியாயவிலை கடைகளில் நுகர்வோர்களுக்கு தரமான அரிசி சரியான எடையில் வழங்கப்படும். முதலமைச்சர் அறிவித்த 14 வகை பொருட்கள் படிப்படியாக அனைத்து நியாயவிலை கடை களிலும் இரண்டு மாதங்களுக்குள் வழங்கப்படும். கிடப்பில் போடப்பட்டுள்ள புதிய குடும்ப அட்டை விண்ணப்பம் செய்தவர்களுக்கு விரைவில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்.

கடந்த 5 ஆண்டுகளாக ஏழைகளுக்கு குறைத்து வழங்கப்பட்ட மண்ணெண்ணெய் அளவு மீண்டும் பழையபடி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ’தொப்பூர் கணவாய்’ பகுதியில் தொடரும் விபத்துகள்: லாரி மோதி 3 பேர் பலி!

ABOUT THE AUTHOR

...view details