தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஃபைபர் படகில் சிக்கிய 250 கிலோ எடை கொண்ட 'ஏ' மீன்: மீனவர்கள் மகிழ்ச்சி!

நாகப்பட்டினம்: ஏற்றுமதி ரகம் கொண்ட 14 அடி நீள ஏ மீன் ஃபைபர் படகு மீனவர்கள் வலையில் சிக்கியதை அடுத்து மீனவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஏ மீன்
ஏ மீன்

By

Published : Jul 10, 2020, 6:47 AM IST

நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், கல்லார் உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான ஃபைபர் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

கரைப் பகுதியில் மட்டுமே சென்று மீன்பிடித் தொழில் செய்யும் ஃபைபர் படகு மீனவர்கள், கடலில் வலையை விரித்து மீன்களுக்காக காத்திருந்த நேரத்தில், மழை பெய்யத் தொடங்கியதை அடுத்து அவசர அவசரமாக கரை திரும்பினர்.

இந்த நிலையில் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த செல்வம் என்பவருக்குச் சொந்தமான படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் அவசர அவசரமாக மீன்பிடி வலையை படகுக்குள் இழுத்தனர், அப்போது வலையோடு படகையும் கடலுக்குள் இழுத்துச் சென்றதால், அச்சமடைந்த மீனவர்கள் போராடி வலையை எடுத்தனர். அப்போது அவர்களுக்கு ஆச்சரியம் காத்திருந்தது.

ஆழ்கடலில் கிடைக்கக்கூடிய சுமார் 14 அடி நீளமும் 250 கிலோ எடையும் உள்ள ஏற்றுமதி ரக 'ஏ' மீன் தங்களது வலைகளில் கிடைத்ததால், மகிழ்ச்சியுடன் கரை திரும்பிய மீனவர்கள், படகில் இருந்து மீனை கரைக்குக் கொண்டு செல்ல பத்துக்கும் மேற்பட்ட சக மீனவர்களின் உதவியை நாடினர். பின் அந்த மீனை விற்பனைக்கு அனுப்பி வைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details