நம் நாட்டில் சமவெளிக்குள் வாழும் மக்களுக்கு கடல் மீன்களைத் தெரியும். ஆனால் மீனவர்களின் வாழ்வியலை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கடலுக்குள் மீன் பிடிக்க செவல்பவர்களின் சிலரது வாழ்க்கை முடிந்தால் முடியும், தொடர்ந்தால் தொடரும் என்ற நிலையில் தான் இருக்கிறது.
நடுக்கடலில் மீன் குழம்பு ருசித்த மீனவர்கள் - வைரலாகும் வீடியோ!
நாகப்பட்டினம்: ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற நாகை மீனவர்கள் மீன் குழம்பு சமைத்து சாப்பிடும் காணொலி இணையத்தில் வைரலாகி வருகிறது.
மீனவர்களின் எதார்த்த வாழ்க்கையை அலசி ஆராய்ந்தால் நமது வாழ்க்கையில் தொலைத்த மகிழ்ச்சியை அவர்கள் மூலம் பெற்றுக்கொள்ளலாம். கண்ணீர், மகிழ்ச்சி, ஆட்டம் பாட்டம் நிறைந்த கொண்டாட்டமும் இருக்கிறது. அப்படித்தான் இந்த நிகழ்வும் பார்ப்பவரை பெருமகிழ்ச்சியடைய வைக்கிறது. மீனவர்கள் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்கின்றனர். அவ்வாறு கூட்டம் கூட்டமாக செல்லும் மீனவர்கள் நாள் கணக்கில் தங்கி ஆழ்கடலுக்குள் மீன்பிடித்து வருகின்றனர்.
இந்நிலையில், நாகப்பட்டினம் மீனவர்கள் ஆழ்கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற இடத்தில் சாப்பாடு சமைத்து, தாங்கள் பிடித்து வைத்த மீனை நாக்கிற்கு சுவை தரும் குழம்பாக சமைத்து உணவருந்திய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.