நிவர் புயல் நாளை (நவ.24) மாலை புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்று வானிலைஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயலால் அதி தீவிர மழை மற்றும் சூரைக்காற்று 110 கீலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது.
அந்த வகையில், நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரையில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. கடந்த ஆண்டு முதல் 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதிப்பீட்டில் தரங்கம்பாடியில் மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கான வேலைகள் தொடங்கி நடந்து வருகிறது. துறைமுகம் அமைப்பதற்காக கடலில் கருங்கற்களால் ஆன அலை தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டு கடலில், படகு நிறுத்தும் தளம் மற்றும் மீன்வலை கூடம் அமைக்கப்பட்டு வருகிறது.