தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எதிர்பார்த்த கோலா மீன்கள் கிடைக்காததால் மீனவர்கள் ஏமாற்றம்! - lack of koala fish in nagappatinam

நாகப்பட்டினம்: தரங்கம்பாடி பகுதியில் சீசனிலும் எதிர்பார்த்த அளவு கோலா மீன்கள் கிடைக்காததால் அப்பகுதி மீனவர்கள் ஏமாற்றமடைந்தனர்.

koala-fish-in-nagappatinam
koala-fish-in-nagappatinam

By

Published : Jun 18, 2020, 9:13 AM IST

கரோனா ஊரடங்கு காரணமாக மீனவர்கள் மூன்று மாதங்களாக கடலுக்குச் செல்லாமல் வீட்டில் முடங்கினர். அதையடுத்து தளர்வுகளின் அடிப்படையில் கடலுக்குச் செல்ல அனுமதியளிக்கப்பட்டது.

அதன்படி மீனவர்கள் கடலுக்குச் சென்றுவருகின்றனர். இந்த நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுவருகின்றனர்.

ஏப்ரல்-ஜூன் மாதங்களில் கோலா மீன் சீசன் என்பதால் பெருமளவில் அவை கிடைக்கும் என எதிர்பார்ப்புடன் பெருமாள் பேட்டை மீனவர்கள் நேற்று அதிகாலை 20-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் கடலுக்குச் சென்றனர்.

மாலை 5 மணி அளவில் கரை திரும்பிய அவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு கோலா மீன்கள் கிடைக்காததால் ஏமாற்றமடைந்தனர். குறைந்த அளவே மீன்கள் சிக்கியதால் பெரும்பாலான மீனவர்கள் மிகுந்த வருத்தம் அடைந்தனர்.

மேலும் ஆயிரம் கோலா மீன்கள் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை விற்கப்படுகின்றன.

இதையும் படிங்க:மீன்கள் ஏற்றுமதிக்கு கார்கோ விமானம் இயக்க மீனவர்கள் கோரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details