மயிலாடுதுறை: சீர்காழி தாலுகா கீழமூவர்க்கரை மெயின்ரோட்டை சேர்ந்தவர் மீனவர் மூர்த்தி (58). இவர் தன்னையும் தனது குடும்பத்தினரையும் கீழமூவர்க்கரை மீனவ பஞ்சாயத்தார்கள் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக குற்றம்சாட்டி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் மகா பாரதியிடம் புகார் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில் "கீழமூவர்க்கரை கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருவதாகவும், தனது மூத்த மகன் அன்பரசனுக்கும் வாணகிரி மீனவ கிராமத்தை சேர்ந்த பிரசாந்தி என்பவருக்கும் கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் செய்து வைத்ததாகவும் தெரிவித்து உள்ளார். அதன் பிறகு தனது மகன் மடவாமேடு கிராமத்தில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வந்தார்.
அதன் பிறகு வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற போது சம்பாதித்த பணத்தை மருமகளுக்கு கொடுத்தார். தற்போது கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். தனது மகன் விவாகரத்து கேட்டு சீர்காழி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு தீர்ப்பாகி உள்ளது.