டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் தமிழக அளவில் முதலிடம் - மீன்வளப் பல்கலைக்கழகம்
நாகப்பட்டினம்: தமிழ்நாடு டாக்டர் ஜெ .ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் தமிழக அளவில் முதலிடம் பெற்றுள்ளதாக, பல்கலைக்கழக துணைவேந்தர் பெலிக்ஸ் தெரிவித்தார்.
டாக்டர் ஜெ .ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் தமிழக அளவில் முதலிடம்
நாகப்பட்டினத்தை தலைமையிடமாகக் கொண்டு தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் கடந்த 2012ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் தூத்துக்குடி, பொன்னேரி, தலைஞாயிறு, வாணியஞ்சாவடி உள்ளிட்ட 10 இடங்களில் கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பல்கலைக்கழகத்தில் செய்தியாளர்களை சந்தித்த துணைவேந்தர் பெலிக்ஸ், இந்திய அளவில் 72 வேளாண் சார்ந்த பல்கலைக்கழங்கள் செயல்படுவதாகவும், வேளாண் சார்ந்த பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஆண்டுதோறும் இந்திய கவுன்சில் வேளாண் ஆராய்ச்சித்துறை (ICAR) வெளியிடுவதாகவும் தெரிவித்தார்.
இந்த ஆண்டிற்கான தரவரிசை பட்டியல் தற்போது வெளியான நிலையில், தமிழகத்தில் உள்ள மாநில வேளாண் பல்கலைக்கழகங்களில், தமிழ்நாடு டாக்டர். ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் முதல் இடம் பெற்றுள்ளது எனவும், இந்திய அளவில் வேளாண் சார்ந்து 72 பல்கலைக்கழகங்களில் 25ஆவது இடமும் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.