தமிழ்நாட்டில் இன்று (ஆகஸ்ட் 30) தளர்வில்லா ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. மயிலாடுதுறையில் பல்வேறு இடங்களில் ஆடு மற்றும் மீன் இறைச்சி கடைகளில் மறைத்துவைத்து இறைச்சி விற்பனை நடைபெற்றது. இதையடுத்து, நகராட்சி நிர்வாகம் சார்பில் நகராட்சியில் உள்ள 12 இறைச்சி கடைகளில் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
கள்ளத்தனமாக இறைச்சி வியாபாரம்: பறிமுதல் செய்த நகராட்சி - நாகப்பட்டினம் மாவட்டம்
நாகப்பட்டினம்: மயிலாடுதுறையில் தளர்வில்லா ஊரடங்கை மீறி வியாபாரம் செய்த 100 கிலோ மீன், 20 கிலோ ஆடு இறைச்சி ஆகியவற்றை நகராட்சி அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
Fish and mutton confiscated by Mayiladuthurai municipality
பின்னர் மறைத்து வைத்து விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த 20 கிலோ ஆடு இறைச்சி, சாலை ஓரங்களில் விற்பனைக்காக வைத்திருந்த 100 கிலோ மீன் ஆகியவற்றை கைப்பற்றிய நகராட்சியினர் அவற்றை மீண்டும் பயன்படுத்த முடியாத வகையில் லைசால் தெளித்து அழித்தனர்.
மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் இறைச்சி வெட்டும் கட்டை, கத்தி, தராசு ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.