தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு - ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம் - மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு

தரங்கம்பாடியில் நடைபெற்ற மூன்று மாவட்ட மீனவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இந்திய கடற்படை மற்றும் மத்திய அரசை கண்டித்து நவம்பர் 11ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Oct 29, 2022, 4:46 PM IST

மயிலாடுதுறை :தரங்கம்பாடியில் உள்ள ஸ்ரீ ரேணுகாதேவி தனியார் திருமண மண்டபத்தில் மயிலாடுதுறை, நாகை, காரைக்கால் ஆகிய 3 மாவட்ட மீனவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் 21 கிராம மீனவப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மயிலாடுதுறை, காரைக்கால், நாகை மாவட்ட மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியும், கொலை வெறி தாக்குதல் நடத்திய இந்திய கடற்படையையும், மத்திய அரசையும் கண்டித்து கடலூர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள மாவட்ட மீனவர்கள் சார்பில் நவம்பர் 11ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மீனவர்களின் ஆலோசனை கூட்டம்

கண்டன ஆர்ப்பாட்டம் எந்த இடத்தில் நடந்தாலும் மயிலாடுதுறை, நாகை, காரைக்கால் ஆகிய 3 மாவட்டங்களும் இணைந்து நடத்தட வேண்டும் என்றும் அனைத்து மாவட்ட மீனவர்களும் தொழில் மறியல் செய்திட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இதையும் படிங்க:ஆரம்பாக்கத்தில் மின்மாற்றி மீது ஏறி மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்

ABOUT THE AUTHOR

...view details