தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாதவர்கள் மீது வழக்குப்பதிவு - எஸ்பி கண்டிப்பு - கிராம சபை கூட்டம்

நாகப்பட்டினம்: கிராமசபைக் கூட்டத்தில் முகக் கவசம், சமூக இடைவெளியைப் பின்பற்றாதவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம்
காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம்

By

Published : Oct 1, 2020, 10:48 PM IST

இந்தியா முழுவதும் நாளை (அக்டோபர் 2) காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்தத் தினத்தன்று கிராமசபைக் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.

இதனையடுத்து நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் கூறுகையில், ஊராட்சிகளில் நடைபெற உள்ள கிராம சபை கூட்டங்களில் குறைந்த அளவு எண்ணிக்கையில் தேவையான நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்.

கூட்டத்தில் கலந்துகொள்பவர்கள் கரோனா தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். முகக் கவசம், சமூக இடைவெளியை முறையாகப் பின்பற்ற வேண்டும். இதனை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று கண்டிப்புடன் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details