மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா தொழுதூர் கிராமத்தில், இந்திய நெல் ஆராய்ச்சி நிலையம், வேளாண்மை அறிவியல் நிலையம் இணைந்து ஆதிதிராவிடர் துணை திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழக விரிவாக்க கல்வி இயக்குனர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்தப் பயிற்சி முகாமில் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் கோபால கண்ணன் முன்னிலை வகித்தார்.
இந்த பயிற்சி முகாமில், தொழில்நுட்ப வல்லுநர் சந்திரசேகர் கலந்து கொண்டு விவசாயிகள் நெற்பயிர் சம்பந்தமாக என்னென்ன பிரச்னைகள்சந்திக்கிறார்கள், நெற்பயிர்கள் சம்பந்தமான பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது குறித்தும் விவசாயிகளிடம் எடுத்துரைத்தார். பின் அங்கக வேளாண்மை நெற்பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை முறைகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.