மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் உள்ளது அரசூர் கிராமம். இக்கிராம விவசாயிகள் சுமார் 140 ஏக்கரில் சம்பா சாகுபடி பணிகளை மேற்கொண்டுவருகின்றனர். கடந்த 10 நாள்களுக்கு முன்பு விதைவிட்டு நாற்றுகளையும் நட்டுள்ளனர்.
நேரடி நெல்விதைப்பு முறையில் நடவும்செய்த நிலையில், கடந்த ஒரு வாரமாக இப்பகுதியில் விட்டுவிட்டு மழை பெய்துவருவதால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
மேலும், மழைநீர் வடியாமல் வயல்களில் முழங்கால் வரை தேங்கி நிற்கிறது. கடந்த 8 ஆண்டுகளாக இப்பகுதியின் வடிகால் வாய்க்காலாக விளங்கும் வெள்ளவாய்க்காலை பொதுப்பணித் துறையினர் தூர்வாராததால் தண்ணீரை வடியவைக்க வழியின்றி விவசாயிகள் தவித்துவருகின்றனர்.