மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி, மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் பங்கேற்றனர்.
இதனிடையே கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக விவசாயிகள் 30-க்கும் மேற்பட்டோர் குறுவை பயிர் காப்பீடு திட்டத்தை அறிவிக்காத தமிழ்நாடு அரசை கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் திரண்டு கோஷங்களை எழுப்பினர். பின்னர் அலுவலகக் கூட்ட அரங்கில் சென்று மாவட்ட வருவாய் அலுவலரிடம் மாவட்ட ஆட்சியர் பங்கேற்காதது குறித்து விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கூட்டுறவு சங்கங்களில் யூரியா, தட்டுப்பாடு நிலவுவதாகவும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டினர்.
பின்னர் அதிகாரிகள் முன்பு தரையில் அமர்ந்து மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து விவசாயிகள் கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையிலான போலீசார் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதற்கு உடன்படாமல் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (மார்க்சிஸ்ட்), தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறி வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் குறைந்த அளவிலான விவசாயிகளை கொண்டு கூட்டம் நடைபெற்றது.
இதையும் படிங்க:உடல் நலத்தை கவனித்துக்கொள்ளுங்கள்': ஓபிஎஸ்-க்கு பிரமதர் மோடி அட்வைஸ்