நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓஎன்ஜிசி, 24 எண்ணெய் கிணறுகள் தோண்ட 2013ஆம் ஆண்டு அனுமதி தரப்பட்டது. ஏற்கனவே 16 எண்ணெய் கிணறுகள் உள்ள நிலையில், மீதமுள்ள எண்ணெய் கிணறுகளை அமைக்க ஓஎன்ஜிசி சுற்றுச்சூழல் அனுமதி கேட்டிருந்தது.
இதனிடையே, ஓஎன்ஜிசிக்கான அனுமதியை மேலும் மூன்று ஆண்டுகள் நீட்டிக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக வல்லுநர் குழு பரிந்துரை செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், "விவசாயிகளுக்கு எதிரான அறிவிப்புகளை மத்திய அரசு தொடர்ந்து வெளியிட்டுவருகிறது. டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த எண்ணெய் கிணறு அமைக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக வல்லுநர் குழு பரிந்துரை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.